Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 28 Jul 2018

நீரவ் மோடியின் அமெரிக்க சொத்துக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்

  இந்திய வங்கிகளில் பல கோடிகளை கடன் வாங்கிவிட்டு அதை கட்டாமல் உல்லாசமாக இருப்பது என்பது வழக்கமாக நடந்து வந்த ஒன்றுதான். அதுபோல வாங்கி அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, அரசைவாதிகளின் துணையோடு வங்கிகளை மோசடி செய்தி கொடிகளை ஏப்பம் விட்ட பெரு முதலாளிகளும் ஏராளம் . ஆனால் கடந்த சில வருடங்களாக மத்திய அரசு வங்கிகளின் சட்டங்களையும் , திவாலான பணக்காரர்களின் சொத்துக்களை ஏலம் விடும் நடைமுறையிலும் சீத்திருத்தம் கொண்டு வந்தது. இதன் விளைவாக தற்போது பெரிய பணக்காரர்கள் வழியறியாது நாட்டை விட்டு ஓடும் நிலை வந்துள்ளது. அப்படி ஓடிய நீரவ் மோடி பல வங்கிகளை ஏமாற்றி 10,000 கோடிகளுக்கு மேல் சுருட்டிவிட்டு, அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவரைப்போல் ஓடுபவர்களின் இந்திய சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்க சொத்துக்களை இந்திய அரசு தொட முடியுமா? தொட முடியும் என்று அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இவரின் சொத்துக்களை விற்றால், இவரால் ஏமாற்றப்பட்ட PNB வங்கிக்கும் அதில் உரிமையுள்ளது அன்று தீர்ப்பு அளித்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்