Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 23 Oct 2018

நேதாஜி, சர்தார் படேல் போன்றவர்களின் நினைவுகளை அழிக்கத்துடிக்கும் ஒரு குடும்பம்: மோடி ஆவேசம்!!!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து பாரதம் விடுதலை வாங்குவதற்கு பல வருடம் முன்பே விடுதலை பிரகடனம் செய்து தனி ராணுவத்தை நிறுவியவர் நேதாஜி என்று நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ். அவருக்கு பக்க பலமாக நின்றவர்கள் தமிழர்கள், அவர் அமைத்த படையில் பெருவாரி வீரர்கள் தமிழர்கள். அந்த படை அமைக்கப்பட்டு 100 ஆண்டு ஆனதை விழாவாக மத்திய அரசு கொண்டாடியது. அதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு குடும்பத்தை முன்னிறுத்துவதற்காக நேதாஜி மற்றும் சர்தார் படேல் போன்றவர்களின் நினைவுகளை நம் மனதிலிருந்து அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தனது அரசு அத சரி செய்கிறது என்று கூறினார். காந்தி குடும்பம் என்று கூறப்படும் நேரு குடும்பமே காங்கிரஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் தலைமையை நெடு நாட்களாக வகித்து வந்துள்ளது. ஆனால் இவர்கள் தலைமையிலான அரசு நேதாஜிக்கோ அல்லது சர்தார் படேல் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கவில்லை. பின்னர் வந்த ஜனதா மற்றும் பிஜேபி அரசுகள் தாம் அந்த விருதை அவர்களுக்கு வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து மற்ற எல்லா அரசு சம்பந்தமான கட்டிடங்கள் , திட்டங்கள், விருதுகள் என எல்லாவற்றிலும் நீக்கமற இவர்கள் பெயரே சூட்டப்பட்டது வரலாறு. ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியலை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது இந்த குடும்பமே.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்