செய்திகள் •
22 Jan 2026
சென்னை வந்த பிரதமர் மோடி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார தொடக்கம்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு புறப்பட்டார்.
மாலை 3:15 மணியளவில் பொதுக்கூட்ட மேடையை அடைந்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
பிரசார கூட்டம் முடிந்ததும், அவர் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய