Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 22 Jan 2026

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய எதிர்ப்பால் கூடுதல் வரி திட்டத்தை கைவிட்ட டிரம்ப்

கிரீன்லாந்து கையகப்படுத்தல் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவற்றின் மீது விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 10 சதவீத கூடுதல் வர்த்தக வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய அவர், கிரீன்லாந்தை அமைதியான முறையில் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், ராணுவ நடவடிக்கை எதுவும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த சமரசமும் இல்லை என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் உறுதியாக கூறியுள்ளார்.
அமெரிக்கா – ஐரோப்பா இடையேயான இந்த பதற்றம் உலக அரசியல் மற்றும் வர்த்தக சூழலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்