செய்திகள் •
18 Mar 2019
மனோகர் பரீக்கர் உடலுக்கு பாரத பிரதமர் மோடி அஞ்சலி
மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் பல மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பல மாதங்களாக கணைய புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார்.

நேர்மையான, எளிமையானவர், இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது தான் முதன் முறையாக (Surgical Strike) துல்லிய தாக்குதல் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தியது . மனோகர் பரீக்கரின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கலில் தெரிவித்துள்ளனர்.


- நமது நிருபர் -
⬅ முந்தைய