செய்திகள் •
23 Dec 2018
கம்யூனிஸ்டு அருணனுக்கு இ.ம.க. ராம ரவிக்குமார் சரமாரி கேள்வி?
"இந்து முன்னணி யா?
ஆரிய முன்னணி யா?
திருப்பூரிலே "108 அஸ்வ பூஜை "
நடத்துகிறது இந்து முன்னணி குதிரையை கும்பிடுவது ஆரியர்களுடைய பழக்கம் அவர்கள்
தாம் குதிரையோடு வந்தவர்கள் சாதாரண இந்துக்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை இந்து முன்னணி தனது பெயரை ஆரிய முன்னணி என மாற்றிக் கொள்ளட்டும்."
என நகைச்சுவை மாமன்னர் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த திரு அருணன் கருத்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலருடைய கூட்டு முயற்சியால் ஹிந்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்து முன்னணி நடத்தக்கூடிய இந்த ஒற்றுமை பெருவிழாவிற்கு இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கிறேன் .
ஒரு விமர்சன பொருளாக மாற்றி லூசு அருணன் - ( ஆதாரம் சீமான் பேச்சு) அவர்களுக்கு சாதாரண இந்துவின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும்படி வேண்டி இந்த பதிவை நான் பதிவிடுகிறேன் .
1.யானை குதிரை நாட்டுப்பசு இப்படி நமக்கு நன்மை செய்யக்கூடிய இந்த ஜீவன்களுக்கு வழிபாடு செய்து வணங்குவது சாதாரண இந்துக்களுடைய நடைமுறைதான்.
உதாரணமாக பொங்கல் திருவிழா வருகின்ற பொழுது மாடுகளுக்கு பூஜை செய்கிறோமே வழிபாடு செய்கிறோம்
அது ஆரியமா? சாதாரணமா?
2. ஆரியர்கள் குதிரையோடு வந்தார்கள் என்று சொல்லுகிறார் நம்மை படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள் குதிரையோடு வந்தார்களா இல்லை ஒட்டகத்தோடு வந்தார்களா ?
3. குதிரையை வழிபாடு செய்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னாள் தினசரி தங்களுடைய வாழ்க்கைக்கு உதவி செய்யக்கூடிய குதிரை வண்டி ஓட்ட கூடியவர்களை ஆரியர்கள் என்று அழைப்பாரா ?
இல்லைசாதாரண
இந்து என்று அழைப்பாரா ?
4. குதிரைக்கு வழிபாடு செய்வது ஆரியர்கள் பழக்கம் என்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அய்யனார் கோவில்களிலும் வெள்ளை குதிரையில் தானே எங்கள் தெய்வம் இருக்கிறது .
அப்படியானால் அய்யனார் ஆரியரா? இல்லை சாதாரண இந்துவா?
5. தமிழக காவல்துறையிடம் இந்திய ராணுவத்திலும் முப்படைகளில் குதிரைப்படையும் உண்டு இந்த குதிரை படைக்கு ஆரியப்படை என்று பெயர் மாற்ற அறிவார்ந்த பெருமகன் அருணன் கோரிக்கை வைப்பாரா ?
6. பசு வணங்குவதும் போற்றிப் பாதுகாப்பது தமிழருடைய வழக்கம் இந்த பசு இனத்தை கசப்பு பொருளாக மாற்றி பசு மாமிசம் கறி விருந்து நடத்திய அருணன் போன்ற நபர்களுக்கு பசு ஆரியர்களுடைய பொருளாக தெரியுமா? இல்லை சாதாரண இந்துக்களுடைய பொருளாக தெரியுமா?
7. பல லட்சம் பக்தர்கள் வணங்கக்கூடிய மதுரை கள்ளழகர் திருவிழா குதிரை வாகனத்தில் தான் வருகிறார் அப்படியானால் கள்ளழகர். அப்படியானால் கள்ளழகர் சாதாரண மக்களுக்கு சொந்தமானவரா? இல்லை ஆரியர்களுக்கு ஆனவரா?
மதுரைக்கார அருணன் அவர்களை அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் கூட கூடிய பல லட்சம் பக்தர்கள் எந்த வகை என்பதை நீங்கள் சொல்வீர்களா?
8. வேர்வை சிந்த மனமில்லாமல் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ரத்தத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்தும் நவீன அட்டைப் பூச்சிகள் போல இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் நாட்டில் பல தொழிற்சாலைகளை மூடிய பெருமைக்கு சொந்தக்காரர்கள் இந்த கம்யூனிஸ்ட் மாயையிலிருந்து பல லட்சம் தொழிலாளர்கள் காத்து தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிட திருப்பூரில் தொழில் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு திருப்பூரை காத்திட்ட இந்து முன்னணி தான் உண்மையான தொழிலாளர்களுடைய முன்னணி.
அதை விட்டுவிட்டு உண்டியல் எடுத்து ஊரெல்லாம் வசூல் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் சில்லறை பேர்வழிகளை,
நாங்கள் உங்களை
உண்டியல் பிறப்புகள் என்பதா?
இல்லை
பிளாஸ்டிக் வாளி கொண்டு
வசூல் செய்யும் பேர்வழிகளை பிளாஸ்டிக் பிறப்புகள் என்பதா ?
9 . மதுரையிலே லீலாவதி என்கின்ற கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஒரு பெண்மணியை கொலை செய்தது யார்? என்றும் ,எந்த கட்சி என்றும்
ஊருக்கே தெரியும்.
அப்படி இருக்க ஓட்டு அரசியலுக்காக சிலை திறப்பு விழாவில் சென்று நக்கிப் பிழைக்கும் இந்த மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் உங்கள் கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது என சொன்னால் நன்றாக இருக்கும்.
10. நாய்களின் குறைப்புக்கு பதில் சொல்ல கூடாது என்றுதான் நானும் இருந்தேன் .
ஆனால் நான் வணங்கும் ஐயனார் தெய்வத்தை அவதூறு பரப்பி, ஆரியம் என்று பேசி இந்துக்களுடைய ஒற்றுமை ஏற்பட கூடாது என்று நினைக்கக்கூடிய நச்சுக்கிருமி போன்ற பேர்வழிகளின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக மனம் கொதித்து பதிவிட்டிருக்கிறேன்.
மானமுள்ள அருணன் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்து சமயத்தில் நச்சுக் கருத்து பரப்பகக்கூடிய நாசகார "
"எழுத்தியல் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்றுமே எதிராக இருப்போம்"
இராம. இரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
மாநில பொதுசெயலாளர்
86 430-81430
96553 _65696
- நமது நிருபர் -
⬅ முந்தைய