Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 16 Jan 2026

வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர் விடுதியில் அமலாக்கத்துறை சோதனை – பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சிஎம்சி மருத்துவமனை தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் பீஜியன் என்பவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார் எழுந்துள்ளது. அதேபோல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மருத்துவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனையில், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்