Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 14 Sep 2019

ஸ்டாலின் சொன்னா உடனே கேக்கனுமா?

'பேனர்கள் வைக்கக் கூடாது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையிலும், திருச்சியில், முன்னாள் அமைச்சர் நேருவை வரவேற்று, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில், அ.தி.மு.க., பிரமுகர் வைத்த டிஜிட்டல் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க.,வினர் யாரும் இனி, பேனர்கள் வைக்கக்கூடாது; பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டேன்' என கூறியிருந்தார். திருச்சி கருமண்டபத்தில், இன்று நடக்கும் திருமண விழாவுக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவை வரவேற்று, சாலை ஓரம், பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களும், சாலையின் அருகிலேயே பல பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. 

ஸ்டாலின் உத்தரவிட்ட பின்னரும், நேற்று மாலை, 6:00 மணி வரை, அவை அகற்றப்படவில்லை. 'எனவே, ஸ்டாலின் உத்தரவு, திருச்சி, தி.மு.க.,வினருக்கோ, நேருவுக்கோ பொருந்தாதா' என, மற்ற கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்