Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 31 Aug 2019

ஹிமாச்சலில் மதமாற்ற தடை சட்டம், தமிழகத்தில் எப்போது?

சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபையில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

மாநிலத்தின் சில பகுதிகளில், திருமணம் போன்றவற்றை காரணம் காட்டி, கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை குற்றமாக கருதி, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், மாநில சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், மதமாற்றத்துக்காக செய்யப்படும் திருமணங்களும் செல்லாததாக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு, குரல் ஓட்டெடுப்பின் மூலம், சட்டம் நிறைவேற்றப்பட்டது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்