உடனடி செய்தி

13 நிமிடங்களில் 3 கோல்கள்: எகிப்துக்கு எதிராக அர்ஜென்டினாவின் அதிரடி கம்பேக் வெற்றி

13 நிமிடங்களில் 3 கோல்கள்: எகிப்துக்கு எதிராக அர்ஜென்டினாவின் அதிரடி கம்பேக் வெற்றி
உலகக் கோப்பை 'ரவுண்டு-16' சுற்றில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி 0-2 என்ற பின்னடைவிலிருந்து மீண்டு 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் யாசெர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் ஜிகோ கோல் அடிக்க, அர்ஜென்டினா கடும் நெருக்கடிக்குள்ளானது. தொடக்கத்தில் லியோனல் மெஸ்ஸிக்கு போட்டி சுமுகமாக அமையவில்லை. கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதுடன், பல பாஸ்களும் இலக்கை எட்டவில்லை. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் 79-வது நிமிடத்திலிருந்து போட்டியின் போக்கு முற்றிலும் மாறியது. கிறிஸ்டியன் ரொமெரோவின் கோலுக்கு மெஸ்ஸி அசிஸ்ட் வழங்கினார். அதன் பின்னர் 83-வது நிமிடத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி சமநிலை கோலை பதிவு செய்தார். கூடுதல் நேரமான 90+2-வது நிமிடத்தில் என்ஜோ பெர்னாண்டஸ் தலையால் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு 3-2 என்ற வெற்றியை உறுதி செய்தார். வெறும் 13 நிமிடங்களில் மூன்று கோல்கள் அடிக்கப்பட்டது இந்தப் போட்டியின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. இரண்டாம் பாதியில் எகிப்து அடித்த மற்றொரு கோல், VAR பரிசோதனையில் பவுல் உறுதியானதால் ரத்து செய்யப்பட்டது. போட்டியின் போது எகிப்து பயிற்சியாளர் ஹோசம் ஹாசன் மற்றும் மெஸ்ஸி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர். எகிப்து உதவி பயிற்சியாளருக்கு ரெட் கார்டும் காண்பிக்கப்பட்டது. முன்னாள் அயர்லாந்து வீரர் ராய் கீன், "அர்ஜென்டினா வீரர்களின் போராட்ட மனப்பான்மை அசாதாரணமானது. கடைசி வரை போராடி வெற்றியை பறித்த விதம் பாராட்டத்தக்கது" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உலகக் கோப்பை: 72 ஆண்டுகளுக்குப் பின் காலிறுதியில் சுவிட்சர்லாந்து
உலகக் கோப்பை: 72 ஆண்டுகளுக்குப் பின் காலிறுதியில் சுவிட்சர்லாந்து
1 நாட்கள் முன்பு
90+2 நிமிட அதிர்ச்சி! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு பாய்ந்த ஸ்பெயின்; ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவு
90+2 நிமிட அதிர்ச்சி! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு பாய்ந்த ஸ்பெயின்; ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவு
2 நாட்கள் முன்பு
நெய்மர் ஓய்வு அறிவிப்பு | 16 ஆண்டு சர்வதேச கால்பந்து பயணத்திற்கு முடிவு
நெய்மர் ஓய்வு அறிவிப்பு | 16 ஆண்டு சர்வதேச கால்பந்து பயணத்திற்கு முடிவு
2 நாட்கள் முன்பு
மொராக்கோ, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்; கனடா, பராகுவே வெளியேற்றம்
மொராக்கோ, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்; கனடா, பராகுவே வெளியேற்றம்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்