உடனடி செய்தி
விளையாட்டு ⚡ உடனடி செய்தி

பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது

பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியின் கடைசி நாளில் பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. ஷீத்தல் தேவி அசத்தல் ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பர்-1 வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜடா செய்டனுடன் மோதினார். முதல் நான்கு செட்களின் முடிவில் ஷீத்தல் தேவி 115-116 என்ற புள்ளிக்கணக்கில் பின்தங்கினார். கடைசி செட்டில் 29-28 என சிறப்பாக செயல்பட்டு போட்டியை 144-144 என சமன் செய்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் தேவி 10-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஹர்விந்தர் சிங் தங்கம் ‘ரீகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - பாவ்னா ஜோடி, சீனாவின் லியாம் - ஜியா லெய் ஜோடியை எதிர்கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது. இந்தத் தொடரில் ஹர்விந்தர் சிங் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தியாவுக்கு 4 வெண்கலம் ‘காம்பவுண்டு’ கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி - தோமன் குமார் ஜோடி 157-145 என்ற கணக்கில் ஈராக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. ‘ரீகர்வ்’ பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பாவ்னா, சக வீராங்கனை ராஜ்ஸ்ரீயை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவில் இந்தியாவின் சரிதா, சீனாவின் வாங்கை 141-140 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கலம் பெற்றார். ‘காம்பவுண்டு’ ஆண்கள் தனிநபர் பிரிவில் தோமன் குமார், ஈராக்கின் அபாஸை 143-138 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார். 13 பதக்கங்களுடன் இந்தியா போட்டியின் முடிவில் இந்திய அணி மொத்தம் 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்று சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
1 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
2 நாட்கள் முன்பு
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் இந்தியா: பெண்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இன்று மோதல்
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் இந்தியா: பெண்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இன்று மோதல்
5 நாட்கள் முன்பு
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; இந்தியா அரையிறுதிக்கு தகுதி
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; இந்தியா அரையிறுதிக்கு தகுதி
6 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்