திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் மோதுகின்றன.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களின் முடிவில், கிழக்கு மண்டல அணி வலுவான நிலையில் இருந்தது. கேப்டன் இஷான் கிஷான் 270 ரன்கள் விளாசியதன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.
தெற்கு மண்டல அணிக்கு பின்னடைவு
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இஷான் கிஷானுக்குப் பதிலாக குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
தெற்கு மண்டல அணியின் தொடக்க வீரர்களான நாராயண் ஜெகதீசன் 32 ரன்களிலும், ரஷீத் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
ரவிச்சந்திரன் 23 ரன்களில் முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா அரைசதம்
தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி அரைசதம் பதிவு செய்தார். நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்ற ஷ்ரேயஸ் கோபால் 79 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேப்டன் திலக் வர்மா 56 ரன்களுடனும், மிலிந்த் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கிழக்கு மண்டல அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தெற்கு மண்டல அணியிடம் இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், அந்த அணி கிழக்கு மண்டலத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 466 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
1 நாட்கள் முன்பு
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் இந்தியா: பெண்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இன்று மோதல்
4 நாட்கள் முன்பு
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; இந்தியா அரையிறுதிக்கு தகுதி
5 நாட்கள் முன்பு
இரண்டாவது வெற்றியை நோக்கி இந்திய பெண்கள் அணி; இன்று ஹாங்காங்குடன் மோதல்
6 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்