உடனடி செய்தி

ஆசிய யூத் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்; கலப்பு இரட்டையரில் பதக்கம் உறுதி

ஆசிய யூத் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்; கலப்பு இரட்டையரில் பதக்கம் உறுதி
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் தொடரில், 19 வயதுக்குட்பட்ட இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அணிகள் பிரிவு அரையிறுதியில் அபிநந்த், பிரியானுஜ், பாலமுருகன் மற்றும் குஷால் ஆகியோர் இடம் பெற்ற இந்திய அணி, வலுவான சீனாவை எதிர்கொண்டது. கடுமையான போட்டிக்குப் பிறகு இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கிடையில், 19 வயதுக்குட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திவ்யான்ஷி–அபிநந்த் ஜோடி, சீனாவின் டாங் இரென்–ஜியாங் இயி ஜோடியை 11-9, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் 3-0 என வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று, குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
20 மணி நேரங்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
2 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
3 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்