உடனடி செய்தி

அ.தி.மு.க. வாக்குறுதிகள் பொம்மைகளாக: தங்கமணி பிரசாரத்தில் புதுமையான முயற்சி

அ.தி.மு.க. வாக்குறுதிகள் பொம்மைகளாக: தங்கமணி பிரசாரத்தில் புதுமையான முயற்சி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி நான்காவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களை எளிதில் ஈர்க்கும் வகையில் புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அதன்படி, அ.தி.மு.க. கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பொம்மைகள் மற்றும் கட்-அவுட்டுகளாக வடிவமைத்து, அவற்றை ஒரு லாரியில் வைத்து தொகுதி முழுவதும் சுற்றி காட்டி வருகிறார். இந்த பொம்மைகள் மூலம் ‘அம்மா வீடு’, பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.1000 ரொக்கம், கரும்பு, பானை, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் இலவச மின்சாரம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், கல்விக் கடன் தள்ளுபடி போன்ற முக்கிய வாக்குறுதிகள் விளக்கப்படுகின்றன. மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மைகளும், முருகன் சிலையும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, தேர்தல் பிரசாரத்தில் தனித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
9 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
9 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
10 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்