உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

தமிழகத்தில் டிஜிட்டல் மக்கள் கணக்கெடுப்பு தொடக்கம்; சுய பதிவு செய்ய பொதுமக்களுக்கு வசதி

தமிழகத்தில் டிஜிட்டல் மக்கள் கணக்கெடுப்பு தொடக்கம்; சுய பதிவு செய்ய பொதுமக்களுக்கு வசதி
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, பொதுமக்கள் தங்களது விவரங்களை இணையம் மூலம் தாங்களே பதிவு செய்யும் டிஜிட்டல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த வசதி மூலம் குடும்பங்கள் தங்களது தகவல்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்த விரும்புவோர், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, குடும்ப விவரங்கள், இருப்பிட தகவல்கள் மற்றும் வீட்டு வசதி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த ஆன்லைன் பதிவு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இணையத்தில் பதிவு செய்யாத குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு தோறும் சென்று நேரடியாக தகவல்களை சேகரிக்க உள்ளனர். சுய கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், இது நாட்டின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியமான தரவுகளை உருவாக்கும் தேசிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார். அனைத்து குடும்பங்களும் துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முதல்வர் விஜயும் தனது குடும்ப விவரங்களை இணையத்தில் பதிவு செய்து, பொதுமக்களும் சுய கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். மக்களால் வழங்கப்படும் தகவல்கள் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்