உடனடி செய்தி

சென்னை மாநகராட்சி 90 திட்டங்களுக்கு மறுமதிப்பீடு; கூடுதல் நிதி ஒதுக்கீடு குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி 90 திட்டங்களுக்கு மறுமதிப்பீடு; கூடுதல் நிதி ஒதுக்கீடு குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சி 2026–27 நிதியாண்டு பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்த 90 முக்கிய திட்டங்களின் செலவு மதிப்பீட்டை தமிழக அரசு மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. சில திட்டங்களுக்கு தேவையை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.7,717 கோடி வருவாய் மற்றும் ரூ.9,319 கோடி செலவினம் கணக்கிடப்பட்டதால், ரூ.1,602 கோடி நிதி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனுடன் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடனுக்காக ஆண்டுதோறும் கணிசமான வட்டி செலுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், முந்தைய ஆட்சிக்காலத்தில் சில திட்டங்களுக்கு சந்தை மதிப்பை விட அதிக தொகை ஒதுக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரூ.800 கோடிக்கு மேற்பட்ட ஒப்பந்தப் பணிகள் நிறுத்தப்பட்டு, புதிய மதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை; அவற்றின் செலவு மதிப்பீடு மட்டுமே மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். உதாரணமாக, 100 அரசு பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் செலவில் பிரின்டர்கள் வாங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகம் ரூ.22.12 லட்சத்தில் அதே எண்ணிக்கையிலான பிரின்டர்களை வாங்கி வழங்கியதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.38 லட்சம் அரசு நிதி சேமிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த மறுமதிப்பீட்டின் மூலம் தேவையற்ற செலவுகளை குறைத்து, மாநகராட்சியின் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தவறான மின் பில்லிங் புகார்கள் அதிகரிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எச்சரிக்கை
தவறான மின் பில்லிங் புகார்கள் அதிகரிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எச்சரிக்கை
10 மணி நேரங்கள் முன்பு
பழனி நில வழக்கில் புதிய திருப்பம்; சென்னை உயரதிகாரி மீது விசாரணை தீவிரம்
பழனி நில வழக்கில் புதிய திருப்பம்; சென்னை உயரதிகாரி மீது விசாரணை தீவிரம்
10 மணி நேரங்கள் முன்பு
வந்தே மாதரம் பாதுகாப்புக்கு சட்டம்; மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை
வந்தே மாதரம் பாதுகாப்புக்கு சட்டம்; மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை
1 நாட்கள் முன்பு
கூட்டணி கட்சிகளே முதல்வர் விஜயை விமர்சிக்கின்றன; திருமாவை மறைமுகமாக தாக்கிய வைகோ
கூட்டணி கட்சிகளே முதல்வர் விஜயை விமர்சிக்கின்றன; திருமாவை மறைமுகமாக தாக்கிய வைகோ
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்