செய்திகள்
⚡ உடனடி செய்தி
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் ஒரு பகுதியாக திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை வாங்கியவர்கள், ஆவண சாட்சிகள், நில புரோக்கர்கள் மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் வங்கி பரிவர்த்தனை விவரங்கள், நில ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பழநி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்திலும் அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு, வழக்குடன் தொடர்புடைய பதிவுகளை சேகரித்தனர். மேலும், சிலரிடம் நேரடி விசாரணையும் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலப் பதிவு செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், போலி ஆவணங்கள், அதிகாரிகளின் பங்கு மற்றும் கூட்டுச் சதி இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், கோவில் நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் தொடர்பான இதேபோன்ற முறைகேடுகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
5 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
5 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
5 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்