உடனடி செய்தி

சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அட்டவணை 2026–27: ரோகித்-கோலி மீண்டும் ஒருநாள் போட்டிகளில்!

சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அட்டவணை 2026–27: ரோகித்-கோலி மீண்டும் ஒருநாள் போட்டிகளில்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2026 செப்டம்பர் முதல் 2027 மார்ச் வரை, இந்தியா சொந்த மண்ணில் விளையாட உள்ள சர்வதேச போட்டிகளின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வர உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும். இதில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. 2027 ஜனவரியில், ஜிம்பாப்வே அணி இந்தியா வர உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஒரு முக்கியமான டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறும். மேலும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், வரும் 9 ஒருநாள் போட்டிகளில் மீண்டும் களமிறங்க உள்ளனர் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. அனைத்து டெஸ்ட் போட்டிகளும் காலை 9:30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் மதியம் 2:00 மணிக்கும், டி20 போட்டிகள் இரவு 7:00 மணிக்கும் துவங்கும்.

தொடர்புடைய செய்திகள்

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றியது – நியூசிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றியது – நியூசிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி
1 நாட்கள் முன்பு
பெங்களூரு அணி ‘நம்பர் 11’ ஜெர்சியுடன் அஞ்சலி… 11 ரசிகர்களை நினைவுகூரும் உணர்ச்சி தருணம்
பெங்களூரு அணி ‘நம்பர் 11’ ஜெர்சியுடன் அஞ்சலி… 11 ரசிகர்களை நினைவுகூரும் உணர்ச்சி தருணம்
2 நாட்கள் முன்பு
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: நியூசிலாந்து தோல்வி, தொடர் சமநிலை
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: நியூசிலாந்து தோல்வி, தொடர் சமநிலை
4 நாட்கள் முன்பு
இந்திய ஜோடி பைனலில்: சாலஞ்சர் டென்னிஸில் அர்ஜுன்–ரித்விக் அதிரடி
இந்திய ஜோடி பைனலில்: சாலஞ்சர் டென்னிஸில் அர்ஜுன்–ரித்விக் அதிரடி
5 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்