செய்திகள்
⚡ உடனடி செய்தி
பாஜவை விட்டு வெளியேறிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடக்கம், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி உறுதி
பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, "இது நம்ம இயக்கம் (We The Leaders)" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். கடந்த 18 மாதங்களாக கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிவித்த அவர், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக கூறினார்.
மோடி மீது தனது மரியாதை தொடரும் என்றும், தமிழக நலன்களை முன்னிறுத்தும் அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார். மேலும், தனது இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்றும், அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்றும் உறுதிபடுத்தினார்.
கோவையில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளதாகவும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை அரசியலில் ஈடுபடுத்தும் நோக்கில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
8 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
8 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்