ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்தின் ரேய்ஜவிக் நகரில் நடைபெற்ற சர்வதேச வாள் சண்டை போட்டியில் இந்தியாவின் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச வாள் சண்டை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 'டூர்னோய் சாட்டிலைட்' தொடரில் 13 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்களுக்கான சாப்ரே பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார்.
அரையிறுதிப் போட்டியில் துருக்கியின் யுசெல் எமினேவை எதிர்கொண்ட பவானி தேவி, 15-12 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பைனலில் லிதுவேனியாவின் ஜியாத்ரே ராஸ்கட்டை எதிர்கொண்ட அவர், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி 15-7 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் பவானி தேவி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 'டூர்னோய் சாட்டிலைட்' தொடரில் பவானி தேவி 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு இதே தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
மேலும், இந்த தொடரில் தனிநபர் பிரிவில் பவானி தேவி வென்றுள்ள 8வது பதக்கம் இதுவாகும். இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை அவர் கைப்பற்றியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவியின் இந்த சர்வதேச வெற்றி, இந்திய வாள் சண்டை விளையாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் இந்தியா: பெண்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இன்று மோதல்
3 நாட்கள் முன்பு
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; இந்தியா அரையிறுதிக்கு தகுதி
4 நாட்கள் முன்பு
இரண்டாவது வெற்றியை நோக்கி இந்திய பெண்கள் அணி; இன்று ஹாங்காங்குடன் மோதல்
5 நாட்கள் முன்பு
பும்ரா, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு: ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
6 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்