உடனடி செய்தி

ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி: மும்பை அணிக்கு 27 ரன் தோல்வி

ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி: மும்பை அணிக்கு 27 ரன் தோல்வி
கவுகாத்தியில் நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மழை காரணமாக போட்டி 11 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே 22 ரன் எடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 14 பந்தில் 39 ரன் அடித்து அவுட்டானார். ஜெய்ஸ்வால் 32 பந்தில் 77 ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரியான் பராக் 20 ரன் எடுத்தார். 11 ஓவரில் ராஜஸ்தான் அணி 150/3 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து சிரமப்பட்டது. ரோகித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விரைவில் அவுட்டானனர். இறுதியில் 11 ஓவரில் 123/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
9 மணி நேரங்கள் முன்பு
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
11 மணி நேரங்கள் முன்பு
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
2 நாட்கள் முன்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்