உடனடி செய்தி

தமிழக நலத்திட்டங்களுக்கு நிதி கோரி பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்

தமிழக நலத்திட்டங்களுக்கு நிதி கோரி பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக டில்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, ஜிஎஸ்டி பங்கு, மெட்ரோ ரயில் திட்டம், 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன், சமக்ரா சிக்ஷா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தெளிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் சந்தித்து மாநில நிதி நிலை மற்றும் மத்திய உதவிகள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
8 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
8 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்