உடனடி செய்தி

டில்லி அணி த்ரில் வெற்றி – பஞ்சாப் 210 ரனும் காப்பாற்ற முடியவில்லை

டில்லி அணி த்ரில் வெற்றி – பஞ்சாப் 210 ரனும் காப்பாற்ற முடியவில்லை
தர்மசாலாவில் நடைபெற்ற பரபரப்பான கிரிக்கெட் லீக் போட்டியில் டில்லி அணி, பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டில்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிரடி காட்டியது. பிரியான்ஷ் ஆர்யா முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து தொடங்கிய அவர், 24 பந்துகளில் அரைசதம் எட்டினார். அவர் 56 ரன்களில் அவுட்டானார். பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன் அடித்து அணியை வலுப்படுத்தினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 210/5 ரன் எடுத்தது. 211 ரன் என்ற கடின இலக்கை துரத்திய டில்லி அணிக்கு ஆரம்பம் சற்று சிரமமாக அமைந்தது. முக்கிய வீரர்கள் விரைவில் அவுட்டானதால் 9 ஓவர்களில் 76/4 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்பின் கேப்டன் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 56 ரன் எடுத்தார். தொடர்ந்து மில்லர் 27 பந்துகளில் 51 ரன் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டுசென்றார். கடைசி கட்டத்தில் அஷுதோஷ் சர்மா மற்றும் மாதவ் திவாரி முக்கிய பங்களிப்பு செய்தனர். இறுதியில் டில்லி அணி 19 ஓவர்களில் 216/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு கடைசி பந்தில் அதிரடி வெற்றி – மும்பைக்கு பிளேஆப் வாய்ப்பு நழுவியது
பெங்களூரு கடைசி பந்தில் அதிரடி வெற்றி – மும்பைக்கு பிளேஆப் வாய்ப்பு நழுவியது
1 நாட்கள் முன்பு
குஜராத் அணி அசத்தல் வெற்றி: சுப்மன் கில், சாய் சுதர்சன் அரைசதம் மழை
குஜராத் அணி அசத்தல் வெற்றி: சுப்மன் கில், சாய் சுதர்சன் அரைசதம் மழை
2 நாட்கள் முன்பு
கொல்கட்டா வெற்றி வெள்ளம்: ஆலன் அதிரடி சதம் – டில்லி அணி சரிவு
கொல்கட்டா வெற்றி வெள்ளம்: ஆலன் அதிரடி சதம் – டில்லி அணி சரிவு
3 நாட்கள் முன்பு
லக்னோவிடம் பெங்களூரு தோல்வி: மிட்சல் மார்ஷ் அதிரடி சதம்
லக்னோவிடம் பெங்களூரு தோல்வி: மிட்சல் மார்ஷ் அதிரடி சதம்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்