Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 27 Feb 2026

ஆப்கான்–பாக் எல்லை மோதல் தீவிரம்: 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு என காபூல் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லை பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் டியூரண்ட் கோடு எல்லைப் பிரச்சனை காரணமாக அடிக்கடி துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சமீபத்தில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக தலிபான் படைகள் பல எல்லைப் பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாக்டிகா, பாக்தியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனர் மற்றும் நுரிஸ்தான் மாகாணங்களில் சுமார் 4 மணி நேரம் நீடித்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மற்றும் 19 எல்லை போஸ்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மோதலில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் ஆப்கான் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு டேங்க் அழிக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பாகிஸ்தான் தரப்பு மறுத்துள்ளது. மோதலில் 8 தலிபான் வீரர்கள் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2,611 கிலோமீட்டர் நீளமுள்ள டியூரண்ட் கோடு எல்லைப் பகுதி பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தின் மையமாக இருந்து வருகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்