Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Jan 2026

சோழர்–பாண்டியர் பாரம்பரியத்தை அவமதித்த பேச்சு : திருமாவளவனுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை : சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் வரலாற்றுப் பெருமையை அவமதிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் வரலாற்றை உருவாக்கிய சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களை விமர்சிப்பது வரலாற்று அறியாமையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சியில் தமிழ் மொழி தமிழக எல்லைகளைத் தாண்டி உலகளவில் வளர்ச்சி பெற்றது என்றும், அந்தப் பெருமையை மறைக்கும் முயற்சியே இந்த சர்ச்சை பேச்சு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ் வளர்ச்சிக்கு உண்மையான பங்களிப்பு செய்ததாக கூற முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்