Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Jan 2026

சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் உயர்த்த ஆலோசனை – உயர்நீதிமன்றம் கருத்து கேட்பு

சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து விட்டு, வராமல் போகும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் கூட்ட நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, உண்மையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையும் உருவாகிறது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவின் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் தரிசனம் முடிந்த பிறகு ஒரு பகுதி தொகையை திருப்பி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்