Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 23 Jan 2019

வாலாஜாபேட்டை அரசுபள்ளி மாணவர்களிடம் பைபிள் வினியோகம், மதமாற்ற முயற்சி!

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட உள்நோக்கத்தோடு புதிய ஏற்பாடு என்கின்ற பைபிள் நூலை சுமார் 400 மாணவர்களுக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் வழங்கிக் சென்றிருக்கிறார்கள்.

தகவல் அறிந்ததும்
இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர்
திரு சதீஷ் குமார் அவர்கள் உடனடியாக பள்ளிக்கூடத்திற்கு சென்று கட்டாயமாக இந்த மாணவர்களிடம் பைபிள் வினியோகம் செய்த நபர் யார் என்று கேட்டிருக்கிறார்கள்.

வந்தார்கள் சென்றார்கள் என்று மாணவர்கள் சொல்லி இருக்கிறார்கள் .

உடனடியாக படிக்கக்கூடிய மாணவர்கள் இது போன்ற புத்தகங்களை படிக்கக் கூடாது .

நாம் இந்துக்கள் நம்முடைய புனித நூல்களை படிக்க வேண்டும் .

தாய் மதத்தை விட்டு இறக்குமதி மதத்திற்கு போகக்கூடாது என்று
நம்ம மதத்தினுடைய பெருமைகளை கூறி கிறிஸ்தவ மதமாற்றத்தின் ஆபத்தை எடுத்துக் கூறிய உடனேயே பைபிள் புத்தகத்தை
மாணவர்கள் அனைவரும் திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.

பள்ளி வளாகத்திற்கு உள்ளே வந்து படிக்கக்கூடிய மாணவர்களிடம் பைபிள் விநியோகம் செய்வதற்கு அரசு பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் ஆசிரியர்கள் உதவி இல்லாமல் நடக்காது .

இதுகுறித்து தமிழ்நாடு அரசு, காவல்துறை, பள்ளி கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி மதமாற்ற சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களை காப்போம்
மதமாற்றம் தடுப்போம்
இந்து சமயம் காப்போம்
இந்திய நாட்டை காப்போம்
என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் .
மோசடி மதமாற்றத்தை
தடுத்து நிறுத்திய
இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

ராம ரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி
மாநில பொதுச்செயலாளர்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்