Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 03 Jan 2026

பிரேசிலில் பேருந்து–லாரி மோதி கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ கிராண்டே மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண் பேருந்தின் மீது கொட்டியதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்