Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 03 Jan 2026

பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் இன்று அறிவிப்பு வெளியிடுவார் – சங்கங்கள் நம்பிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஓய்வூதிய திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, அதற்கான முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பால், 2003ம் ஆண்டுக்குப் பிறகு பணி ஓய்வு பெற்ற சுமார் 48,000 அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அறிவிப்பு வெளியான பிறகு, போராட்டம் தொடர்பான அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்