Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 31 Dec 2025

CBSE 10 மற்றும் பிளஸ் 2: மார்ச் 3 தேர்வுகள் மாற்றம் – புதிய தேதிகள் அறிவிப்பு

புதுடில்லி:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு, மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த சில தேர்வுகள் மாற்று தேதிகளில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

2026 கல்வியாண்டிற்கான CBSE பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 3ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் மட்டும் மாற்றப்படுவதாக CBSE நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10ஆம் வகுப்பில் மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த மண்டல மொழி மற்றும் சர்வதேச மொழிப் பாடத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், பிளஸ் 2 வகுப்பில் சட்டம் (Legal Studies) பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் முன் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும் என CBSE நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்