செய்திகள் •
27 Oct 2018
சத்திஸ்கரில்: மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தாக்கியதில் 4 CRPF வீரர்கள் வீரமரணம்
CRPF வீரர்கள் சென்ற கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சத்திஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்திற்கு வீரர்கள் சென்றிருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
டாமினேசன் மற்றும் ரோந்துக்காக சென்ற 168வது சிஆர்பிஎப் பட்டாலியன் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50-100கிகி அளவுள்ள வெடிபொருளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை வெடிக்க வைத்துள்ளனர்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய