Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 28 Nov 2018

காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகிவிட்டார் : டாக்டர் தமிழிசை

சென்னை: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியாழக்கிழமை அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இட வருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடமான நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்ட பிறகு அடுத்த நாள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு பார்வையிட செல்கிறார். குடித்துவிட்டு கார் ஒட்டிய காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்ன தமிழிசை பிக்பாஸ் (BIGGBOSS) நிகழ்ச்சிக்கு முன்பே அவர் பாஜாகாவில் இருந்து விலகிவிட்டார் என்றம் மேலும் அவரை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்