செய்திகள் •
22 Nov 2018
சாலை மார்க்கமாக திமுக ஸ்டாலின் எத்தனை இடத்திற்கு போய் பார்த்தார்?
பாரத பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் தமிழகத்தை மிகவும் தாக்கிய கஜா புயல் பாதிப்புகளுக்கு 15,000 கோடி நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்தார். கஜா புயல் சேத மதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தினார்.
சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டரில் சென்று பாதிப்புகளை பார்த்தது ஏன்?
என்ற பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் நாங்கள் ஓரே நாளிலையே பாதிப்புக்கு உள்ளான அனைத்து மாவட்டங்களையும் பார்த்தது மட்டும் அல்லாமல் பாதித்த பகுதிகளை புகைப்படங்கள் எடுத்துவந்துளோம் அந்த போட்டோக்களை பிரதமரிடம் காண்பித்து இருக்கிறோம் என்கிறார் .
சாலை வழியாக எத்தனை இடத்துக்கு ஸ்டாலின் போனார்? என கேட்டார் எடப்பாடி பழனிசாமி .