Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Oct 2018

நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் குமார் - டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்

நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் குமார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலையை உண்டாக்கியது. சென்னை மூலக்கொத்தளத்தில் அதிமுகவின்  நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற அவர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டிடிவி தினகரன் மைக் குமார் என்று விமர்சனம் செய்ததற்கு நகைச்சுவையுடன் கூடிய பதிலடி கொடுத்தார் தாம் மைக் டைசன் குமார் என்றும், நான் அடித்தால் நாக் அவுட் தான் அதாவது பிலாட் தான் என்று பேசினார். தனக்கு குத்துச்சண்டை நன்றாக தெரியும், வேண்டுமானால் வாருங்கள் மோதிப் பார்க்கலாம் என்று செய்தியாளர்களை அழைத்ததால் சிரிப்பை உண்டாக்கியது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்