Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 05 Dec 2018

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்

இன்று ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: அதிமுக, அமமுக அமைதி ஊர்வலம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது நினைவு நாள் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை, ஆளும் அதிமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. சென்னை அண்ணாசாலையில் இருக்கும் அண்ணாசிலை அருகேயிருந்து தொடங்கும் அமைதிப் பேரணி, பேரணியானது ஜெயலலிதாவின் நினைவிடம் வரை சென்று அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன் பின்பு கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது . இந்தப் பேரணியில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

அம்மு...அம்மா... தமிழக அரசியல்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்