Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 24 Jan 2026

மத வழிபாட்டு கட்டடங்களுக்கு கலெக்டர் NOC தேவையில்லை என்ற அரசாணைக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்

மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டட திட்ட அனுமதியில் கலெக்டரின் தடையில்லா சான்று (NOC) தேவையில்லை என தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்