Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
தொழில்நுட்பம் • 15 Jan 2026

குரோக் ஏஐ மீது கடும் கட்டுப்பாடு: ஆபாச பட மாற்றங்களைத் தடை செய்த எக்ஸ்

வாஷிங்டன்: எலான் மாஸ்க்கின் சொந்தமான எக்ஸ் (X) சமூக ஊடக தளம், அதன் ஏஐ உதவியாளர் ‘குரோக்’ (Grok) மூலம் நிஜ மனிதர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் செயல்பாடுகளுக்கு கடுமையான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இனி, உண்மையான நபர்களின் படங்களை எடுத்து, அவர்களை ஆபாச உடை அல்லது பாலியல் தோற்றத்துடன் மாற்றும் வகையிலான ஏஐ திருத்தங்களை குரோக் அனுமதிக்காது என எக்ஸ் அறிவித்துள்ளது.

ஏஐ மூலம் உருவாக்கப்படும் பாலியல் படங்கள் சமூகத்தில் தவறான பயன்பாடுகளுக்கும், தனியுரிமை மீறல்களுக்கும் வழிவகுப்பதாக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்புகளே இந்த முடிவிற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏஐ கருவிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என முன்பே வலியுறுத்தியிருந்த பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், எக்ஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இதை, தனது முயற்சிக்கு கிடைத்த முக்கியமான வெற்றியாக பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்