23 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு: முன்னாள் முதல்வர் மகன் அமித் ஜோகி கொலை வழக்கில் குற்றவாளி
அமித் ஜோகி தொடர்புடைய 2003ம் ஆண்டு நடந்த முக்கிய அரசியல் படுகொலை வழக்கில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மகன் அமித் ஜோகியை குற்றவாளி என அறிவித்துள்ளது.
2003 ஜூன் 4ம் தேதி ராய்பூரில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ராமவதார் ஜக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் மாநில போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு வசம் மாற்றப்பட்டது. விசாரணையில் அமித் ஜோகிக்கு சம்பந்தம் இருப்பதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2007ல் விசாரணை நீதிமன்றம் அமித் ஜோகியை விடுதலை செய்திருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.
இறுதியாக, உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் மீண்டும் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பழைய தீர்ப்பை ரத்து செய்து, அமித் ஜோகியை குற்றவாளி என அறிவித்துள்ளது.
மேலும், மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
16 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
16 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
17 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்