செய்திகள்
⚡ உடனடி செய்தி
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நன்றியுடன் நினைவுகூருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் இன்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
140 கோடி இந்தியர்களின் பங்களிப்பால் பல்வேறு துறைகளில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த வளர்ச்சிப் பயணம் மேலும் வேகமடைய வேண்டும் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
6 மணி நேரங்கள் முன்பு
சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் வீரேந்தர பசோயா கைது
6 மணி நேரங்கள் முன்பு
உலக அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா? ஆய்வில் வெளியான தகவல்
6 மணி நேரங்கள் முன்பு
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்