அசாம் தேர்தல்: பாஜக வென்றால் பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
அசாம் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தேமாஜி மாவட்டத்தின் கோகாமுக் பகுதியில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியபோது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொதுச் சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அவர், “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கும்” என குற்றம் சாட்டினார்.
2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாகவும், அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் அது நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அசாமின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், பழங்குடியின மக்களுக்கு அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
மேலும், பாஜக ஆட்சியில் மாநில வளர்ச்சி வேகமாக முன்னேறியுள்ளதாகவும், பிரம்மபுத்ரா நதிக்குக் குறுக்கே பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏழை மக்களுக்கான வீட்டு திட்டத்தின் கீழ் 22 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கு முன், தேர்தல் பிரசாரத்தின் போது திப்ரூகர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற மோடி, அங்குள்ள தொழிலாளர்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்