உடனடி செய்தி

அமோனியா கசிவு தொழிற்சாலை: நாளை முதல் வாயு அகற்றும் பணி; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அமோனியா கசிவு தொழிற்சாலை: நாளை முதல் வாயு அகற்றும் பணி; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமோனியா வாயு கசிவால் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், நாளை முதல் பாதுகாப்பான முறையில் மீதமுள்ள அமோனியா வாயுவை வெளியேற்றும் பணிகள் நடைபெற உள்ளன. கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 48 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இரண்டு நாட்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அமோனியா வாயு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர். வாயு அகற்றும் பணிகள் நடைபெறும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படும் என்றும், அவசர உதவிக்காக கன்னிகைப்பேர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
15 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்