அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் த.வெ.க.வில் இணைப்பு: அரசியல் களத்தில் புதிய பரபரப்பு
தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு முன்னாள் அமைச்சர்கள் தமிழ்வேற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளனர். பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி சிவபதி ஆகியோர் கட்சியில் இணைந்தனர்.
அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய த.வெ.க. நிர்வாகிகள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக த.வெ.க. வளர்ந்து வருவதாகவும், மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அ.தி.மு.க.விலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவதால், கட்சியின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. மேலும், சில நிர்வாகிகள் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்திலும் இணையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், அ.தி.மு.க. தலைவர்கள் இந்த கருத்துகளை மறுத்து, கட்சியின் அடித்தளம் வலுவாக இருப்பதாகவும், சில தனிநபர்களின் விலகல் கட்சியை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 மணி நேரங்கள் முன்பு
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
2 மணி நேரங்கள் முன்பு
100 நாளில் 904 ரெய்டுகள்; 322 உணவு நிறுவனங்கள் மூடல் – துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கை
1 நாட்கள் முன்பு
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்