தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் சர்ச்சை: அமைச்சர்கள் அறை வரை வீடியோ எடுத்ததால் அதிர்ச்சி
தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்திக்க வரும் சில தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், வளாகத்திற்குள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக வெளியிடுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்றதையடுத்து, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவை சந்திக்க தினமும் ஏராளமானோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நுழைவாயில்களில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமைச் செயலகத்திற்குள் நுழைய வரும் அனைவரிடமும் சந்திப்புக்கான காரணம், அனுமதி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், அனுமதி பெற்று உள்ளே செல்லும் சிலர், நுழைவாயிலில் இருந்து அமைச்சர்களின் அலுவலகம் வரை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில், கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவை சந்திக்க சென்ற இளம்பெண் ஒருவர், அமைச்சரின் அறை மற்றும் அங்கு சென்ற வழித்தடங்களை உள்ளடக்கிய வீடியோவை 'ரீல்ஸ்' வடிவில் வெளியிட்டது கவனத்தை ஈர்த்தது. மேலும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வி.ஐ.பி. லிப்டில் பயணித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தின் உள்பகுதிகள் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவுவது பாதுகாப்பு சவால்களை உருவாக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற வீடியோ பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்