'சிலரை திருத்தவே முடியாது' - அதிமுகவில் மறைமுக விமர்சனம் செய்த பழனிசாமி
அதிமுகவில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிப் பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு பதிலாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி, ஏராளமான தொண்டர்களை அழைத்து வந்ததால் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
கூட்டத்தில் சில நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த பழனிசாமி, "விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இனி அனைவரும் இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டும். சிலரை திருத்தவே முடியாது; அவர்களைப் பற்றி கவலைப்படாமல் கட்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விழுப்புரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் பசுபதி, சி.வி. சண்முகத்தின் குடும்ப ஆதிக்கம் காரணமாக பலர் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், தற்போது தொண்டர்கள் சுதந்திரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 1,150 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும், பலரின் கையெழுத்துகள் போலியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்