உடனடி செய்தி

உலக கல்வி நகரங்கள் தரவரிசை: சென்னை, பெங்களூரு, மும்பை இடம்பிடித்தன

உலக கல்வி நகரங்கள் தரவரிசை: சென்னை, பெங்களூரு, மும்பை இடம்பிடித்தன
மாணவர்கள் உயர்கல்வி பயில ஏற்ற உலக நகரங்களின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசையை க்யூ.எஸ். (QS) கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்கொரியாவின் சியோல் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் இங்கிலாந்தின் லண்டன் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன. உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் செலவு, சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் மும்பை 91வது இடத்துடன் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி 99வது இடம், பெங்களூரு 114வது இடம் மற்றும் சென்னை 123வது இடத்தைப் பெற்றுள்ளன. உயர்கல்விக்கான உள்கட்டமைப்பு, கல்வித் தரம் மற்றும் மாணவர் வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இந்த தரவரிசை முக்கியமான குறியீடாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
7 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
7 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
7 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்