உடனடி செய்தி

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு: விக்டோரியா, தாஸ்மேனியாவில் இலவச பொதுப் போக்குவரத்து

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு: விக்டோரியா, தாஸ்மேனியாவில் இலவச பொதுப் போக்குவரத்து
உலகளவில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பல நாடுகளில் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் சூழ்நிலையால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகளவில் எரிசக்தி விநியோகம் குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் எரிபொருள் விநியோகம் மற்றும் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.160 வரை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் முயற்சியாக, விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரயில், டிராம் மற்றும் பஸ் சேவைகள் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தாஸ்மேனியா மாகாணத்திலும் ஜூலை 1ம் தேதி வரை பஸ் மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
16 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
16 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்