சென்னை பல்கலை விடுதியில் அசைவ உணவு சர்ச்சை: மாணவர்கள் இடையே பதற்றம்
சென்னை: தரமணியில் செயல்படும் சென்னை பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு தொடர்பான விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. விடுதியில் தங்கியுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் விருப்பப்படி உணவு வழங்கும் நடைமுறை உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற விடுதி பொதுக்குழு கூட்டத்தில், சில மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை உணவில் மாட்டிறைச்சி சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், விடுதி நிர்வாகம் அதற்கு உடனடி ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து, மாணவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உருவானது. ஒரு தரப்பு மாணவர்கள் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், மற்றொரு தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், சில மாணவர்கள் விடுதி விதிமுறைகளை மீறி அனுமதியின்றி மாட்டிறைச்சி சமைத்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக மற்றொரு குழு, “எங்களுக்கு பன்றியிறைச்சி வழங்க வேண்டும்” என கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த இரண்டு தரப்பினரிடையே கருத்து மோதல் அதிகரித்து, விடுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க, சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்