உடனடி செய்தி

பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி

பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான ஆக்கிரமிப்பு மற்றும் போலி ஆவணங்கள் வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கடைகளுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் எந்த ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டன என்பது குறித்து முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் அமைந்துள்ள மட நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு சுமார் ₹2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள், வருவாய்த் துறை, பதிவுத் துறை மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையின் அடுத்த கட்டமாக, 1880 முதல் மடத்திற்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்குகள், ஆக்கிரமிப்புகள், நிலப் பதிவுகள், சாட்சிகளின் கையெழுத்துகள், வணிக அனுமதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழங்கப்பட்ட மின், குடிநீர் இணைப்புகள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸின் பேரில், மின் இணைப்புகள் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட விதம் மற்றும் அதற்கான அனுமதி ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சேகரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
1 மணி நேரங்கள் முன்பு
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
22 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் லான் பவுல்ஸ்: இந்திய அணிக்கு வெற்றிகரமான தொடக்கம்
காமன்வெல்த் லான் பவுல்ஸ்: இந்திய அணிக்கு வெற்றிகரமான தொடக்கம்
2 நாட்கள் முன்பு
ஹராரேவில் பலப்பரீட்சை: இந்தியா-ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி இன்று
ஹராரேவில் பலப்பரீட்சை: இந்தியா-ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி இன்று
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்