36 நாள் நீண்ட நீட் போராட்டம் முடிவுக்கு வந்தது; சிஜேபி போராட்டத்தை வாபஸ் பெற்றது
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை, சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) அமைப்பு வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 20 முதல் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சிஜேபி நிர்வாகிகள் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர், சிஜேபி சார்பில் சவுரவ் தாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய சவுரவ் தாஸ், மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று, 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். மேலும், நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்