'அ.ம.மு.க. என் வசமே உள்ளது' – தினகரனுக்கு எதிராக மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் அதிரடி பேட்டி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக, மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். கட்சியின் உண்மையான கட்டுப்பாடு தன்னிடமே இருப்பதாகவும், விரைவில் பொதுக்குழுவை கூட்டி அதை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற அ.ம.மு.க. 11 தொகுதிகளில் போட்டியிட்டு, மன்னார்குடி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காமராஜ், பின்னர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சி தலைமையின் அனுமதியின்றி செயல்பட்டதாக குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், காமராஜை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காமராஜ், "பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் யாருடன் இருக்கிறார்களோ, அவர்களிடமே கட்சி உள்ளது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி, அ.ம.மு.க. என் கட்டுப்பாட்டில்தான் இருப்பதை நிரூபிப்பேன். பொதுக்குழுவை கூட கூட்ட முடியாதவர் கட்சியை நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த பொதுக்குழு கூட்டத்தை தானும் தனது ஆதரவாளர்களும் இணைந்து நடத்தியதாகவும், கட்சியின் எதிர்காலம் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
காமராஜின் இந்த பேட்டி, அ.ம.மு.க.வில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், டிடிவி தினகரன் தரப்பிலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்